ஆதார வசனங்கள்: லூக்கா 5;36-39
கடவுளின் ஒவ்வொரு புதிய செயலும் புதிய திராட்சரசம் போன்றது. அது பழைய துருத்தியை கிழித்துப் போடுவதால், பழைய துருத்திக்குள் ஊற்ற முடியாது. கடவுள் எப்பொழுதும் புது திராட்சரசத்துடன் நம்மை சந்திக்க விரும்புகிறார். இதை அவர் அடிக்கடி செய்ய விரும்புகிறார். எப்பொழுதும் புதிய திராட்சரசத்தை உடனடியாக யாரும் விரும்புவதில்லை.
துருத்தி தயாரிக்கும் முறை: ஆட்டின் உரித்த தோல் ஈரமாக இருக்கும்போதே கழுவ வேண்டும். பின்னர் அதின் உள்ளேயும் வெளியேயும் எண்ணெய் தேய்க்க வேண்டும். திறப்பு மூடப்பட்ட பின் புதிய புளிக்காத ரசம் நிரப்பப்படுகிறது. இப்பொழுது நொதித்தல் செயல்முறை தொடங்குகிறது. இது விரைவான செயல்முறை. நிறைய வாயு வெளியேறுகிறது, இதனால் தோல் வீங்கி பெரிதாகி, தோல் உயிருடன் இருப்பது போல் தெரிகிறது. இது நெகிழ்வாக இருக்க, அதில் தொடர்ந்து எண்ணெய் தேய்க்க வேண்டும்.
பழைய துருத்தி நெகிழ்வாக இருந்தால் மட்டுமே புதிய ரசத்தை ஊற்ற முடியும், இல்லையெனில் ரசத்தின் செயல் நின்றுவிடும். நெகிழ்வாக இல்லை என்றால் எண்ணெய் தேய்த்து மீண்டும் வளைந்து கொடுக்கும் வரை இதைச் செய்ய வேண்டும்.
பழைய திராட்சரசத்தின் அறிகுறிகள்:
- சௌகரியமானது
- மென்மையானது
- பழக்கமானது
- முதிர்ச்சியடைந்தது
- யூகிக்கக்கூடியது
- தெரிந்தது
- நுட்பமானது
புதிய திராட்சரசத்தின் அறிகுறிகள்:
- முரட்டுத்தனமான அல்லது கூர்மையான சுவை
- கொஞ்சம் வேகமானது
- வேகமாக நகரக் கூடியது
- அசைவுள்ளது
- முதிர்ச்சியற்றது
- வெடிக்கூடியது
- துருத்தி மீது அழுத்தம் கொடுக்கக்கூடியது
- நுட்பமற்றது
பழைய துருத்தியை எப்படி புதுப்பிப்பது?
- பழைய, பழுதடைந்த மற்றும் அழுகிய மதுவின் பழைய துருத்தியை காலி செய்யவும். அதாவது மன்னிக்கவும், அறிக்கையிடவும், மனம் வருந்தவும் வேண்டும். பழைய பழமையான, பிரியமான இறையியல் தத்துவங்களை தூக்கி எறிந்துவிட்டு, வேதத்தின் படி, கடவுளுக்கு பயந்து நடக்க மீண்டும் தொடங்குங்கள்.
- தண்ணீர் அல்லது உப்பு கலந்த தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். நம்மைக் கடினமாகவும், இறுக்கமாகவும் ஆக்கிய காரியங்களிலிருந்து நம்மைச் சுத்தப்படுத்த பரிசுத்த ஆவியானவரின் துணை நமக்குத் தேவை.
- எண்ணெய் தேய்த்து, மீண்டும் மென்மையாகவும் நெகிழ்வாகவும் இருக்கும் வரை திரும்பத் திரும்ப தேய்த்து விடவும். பரிசுத்த ஆவியானவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் விருப்பத்துடன், நமது பழைய எண்ணங்களை அகற்றி, குணப்படுதல், முழுமைத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மீண்டும் கொண்டு வர அவரை அனுமதிக்க வேண்டும். மேலும் வரவிருக்கும் அனைத்து மாற்றங்களும், நன்மைகள் மற்றும் சவால்களுடனான புதிய திராட்சை ரசத்தை நிரப்புவதற்கான நிலையை மீட்டெடுக்க பரிசுத்த ஆவியானவரை அனுமதிக்கவும்.
திராட்சத் துருத்தியைப் புதுப்பிப்பதிலிருந்தும் புதிய திராட்சரசத்தைப் பெறுவதிலிருந்தும் நம்மைத் தடுப்பது எது?
மனிதரைப் பற்றிய பயம், வசதியான மற்றும் நிதி பாதுகாப்பை இழப்பது, விருப்பம் இல்லாமை போன்றவையே.
மற்றவர்களின் எதிர்வினைகள்:
தவறான புரிதல், விமர்சனம், பொறாமை, சந்தேகம் போன்றவையே.
மொழிபெயர்த்தவர்: ஜெபா டேனியல்