“ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு”.
வெளிப்படுத்துதல் 2:4
நீங்கள் ஆதியில் கொண்டிருந்த அன்பை இழந்துவிட்டீர்களா? ஆரம்பத்தில் நாம் எப்படி தேவனை நேசித்தோம் என்று இயேசு நம்மிடம் கேட்கிறார். எந்த சூழ்நிலைகள் இருந்தாலும் நம்மை நேசிக்கும் தேவன் இருக்கிறார். ஆனாலும், எங்கோ, நாம் அவர் மீது கொண்டிருந்த அன்பை தொலைத்து விட்டோம். அன்பு இருக்கும் இடத்தில் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் வீட்டில் அல்லது உங்கள் தேவாலயத்தில் மகிழ்ச்சி இல்லை என்றால், அங்கு அன்பு இல்லை என்று அர்த்தம். மகிழ்ச்சியின் உண்மையான வடிவம் அன்பிலிருந்து வெளிப்படுகிறது.
நாம் ஆதியில் கொண்டிருந்த அன்பை எப்படி மீட்டெடுப்பது? அவருடைய முதல் கற்பனைக்கு கீழ்ப்படிவதன் மூலம்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.” பெரும்பாலும் நம் பிரச்சனைகளை தேவன் நம்மைத் தண்டிக்கும் வழி என்று தவறாகப் புரிந்துகொள்கிறோம். ஆனால் அவை கர்த்தரிடம் திரும்பி வருவதற்கும், நாம் ஆதியில் செய்ததைப் போலவே அவரை நேசிப்பதற்கும் போதுமான மற்றும் அதிக வாய்ப்புகளை வழங்க தேவன் நமக்கு பிரச்சினைகளையும் கடினமான நேரங்களையும் தருகிறார். எந்த காரியத்தின் உயிர்மூச்சை மீட்டெடுக்க, நாம் அதன் தொடக்கத்திற்குத் திரும்ப வேண்டும். தேவனுடனான நமது உறவின் தொடக்கத்தை நினைவுபடுத்துவது அவர் மீது நாம் கொண்டிருந்த அன்பை மீண்டும் எழுப்பும். கர்த்தருடனான நாம் கொண்ட ஆதி அன்பு சிலுவையில் தொடங்கியது.
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”.
யோவான் 3:16
பெரும்பாலும், நம்முடைய ஜெபங்களுக்குப் பதில்கிடைக்காத போது, சாத்தான் ஏவாளிடம் சொன்னதைப் போலவே, “தேவன் நம்மை போதுமான அளவு நேசிக்கவில்லை” என்று நம்மிடமும் கூறுகிறான். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தேவன் நம் ஜெபங்களுக்கு பதில்களைத் தடுத்து நிறுத்துகிறார் என்பதை நாம் புரிந்துகொள்வது முக்கியம், இருப்பினும், நித்தியத்திற்கும் அவர் நம்மிடமிருந்து எதையும் நிறுத்துவதில்லை. நம் ஜெபங்களுக்கு பதில் கிடைக்காமல் போனால், அதற்கு பதில் அளிக்க தேவனிடம் வேறு சிறந்த திட்டம் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். அது நம் கற்பனையால் அறிந்து கொள்ள முடியாத திட்டம். நீங்கள் சிலுவையைப் பார்க்கும்போது, உங்களுக்கு இறுதி பரிசைக் கொடுத்த ஒரு தேவனை காண்கிறீர்கள். ஒருவர் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பரிசு தன் ஒரே மகனை தருவது. இயேசுவை தேவன் நமக்காக தந்தார். இயேசு, தம்முடைய கரங்களை நீட்டி, தம்முடைய இரத்தத்தையும், சரீரத்தையும், கடைசி மூச்சைக் கூட நமக்காகக் கொடுத்ததைக் கூறுகிறார்.
பெரும்பாலும், நாம் நமக்கு கிடைக்கும் முடிவில் நம்மைப் பற்றி நினைக்கிறோம் – அவருடைய ஆசீர்வாதங்களையும் அவருடைய பரிசுகளையும் பெற. தேவன் உங்களுக்குத் தேவையானதை அவருடைய காலத்தில் கொடுப்பார். ஆனால் அது வெறும் கொடுக்கல் வாங்கல் உறவாக மட்டும் இருக்கக்கூடாது; அது இரு தரப்பினரும் பெறும் பரஸ்பர உறவாக இருக்க வேண்டும். நம் உடலையும், நேரத்தையும், நம் நிதியையும் தேவனுக்கு சமர்பிப்போம்.
ஒரு கற்பனையான அர்த்தத்தில் பாப்போம்- தேவன் மனிதகுலத்தை உருவாக்கினார், கிறிஸ்து நம் மணிக்கட்டு மற்றும் கணுக்கால்களில் உடலில் உள்ள அனைத்து நரம்பு முடிவுகளையும் நிலைநிறுத்தினார், இது நல்ல யோசனையா என்று தேவன் அவரிடம் கேட்டார் (ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் உருவாக்கிய மனிதர்களின் பாவத்திற்காக கிறிஸ்து இறக்கும் போது, அவரது மணிக்கட்டு மற்றும் கணுக்கால்களில் ஆணி அடிக்கப்படும் போது அனைத்து வலிகளையும் தாங்கிக்கொள்ள வேண்டும்). மனிதகுலத்தின் அனைத்து வலிகளையும் கிறிஸ்து அனுபவித்தார். பெரும்பாலும், தேவன் நம் வேதனைகளைப் பற்றி அறியாமல் இருக்கிறார் என்று நினைக்கும் போது, இல்லை. அவர் நம்மை உணர்கிறார் மற்றும் நம்மீது வைராக்கியமாக இருக்கிறார் என்பதை விசுவாசிக்க வேண்டும். நாம் வலியில் இருக்கும்போது, அவரும் வலியில் இருக்கிறார். அவருடைய அனைத்தையும் அவர் நமக்குக் கொடுத்ததால், நம்முடைய அனைத்தையும் அவருக்குக் கொடுத்தால் மட்டுமே, நாம் அவர் மீது ஆதியில் கொண்டிருந்த அன்பிற்குத் திரும்பமுடியும். தேவன் நம்மை 99% இதயத்துடன் நேசிக்கவில்லை, 100% இதயத்துடன் நம்மை நேசித்தார். பதிலுக்கு நாம் அவருக்கு எவ்வளவு அன்பை கொடுக்கிறோம்?
மரணம் அவரது உயிரை எடுக்கவில்லை, அன்பு செய்தது. ஒரு ஆசிரியர் இப்படியாக எழுதினார், “இயேசு தனது அன்பை சிவப்பு நிறத்தில் எழுதினார்”. சிலுவையைப் பார்த்தால்தான் சிலுவையில் உள்ள அன்பைக் காண்பீர்கள். நம்மிடம் தீய குணம் மற்றும் எல்லா பாவங்கள் இருந்தபோதிலும், அவர் தொடர்ந்து நம்மை நேசிக்கிறார். அவர் நமக்காக மரித்தது மட்டுமல்ல, தம் இரத்தத்தால் நம்மைக் கழுவிச் சுத்திகரித்தார். மற்றொரு எழுத்தாளர் “நான் அவருடைய இரத்தத்தை வரைந்தேன், அவர் என்னைக் தம் ரத்தத்தால் கழுவினார்” என்று எழுதினார். தேவன் நம்மீது மிகுந்த வாஞ்சையாயிருக்கிறார்; நாம் அவர் மீது வாஞ்சையாக உள்ளோமா? மக்கள் ஆர்வமின்மையால் ஆலய ஆராதனைகளில் கொட்டாவிவிட்டு தூங்குகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனைகளில் அவரது மணமகள் அவரது முகத்தில் கொட்டாவி விடுவதைக் காண இயேசுவானவர் தனது மணிக்கட்டுகளிலும் கணுக்கால்களிலும் ஆணியடிக்கப்படவில்லை.
பாவம் எவ்வளவு இருண்டது என்பதை சிலுவை நமக்கு வெளிப்படுத்துகிறது – தேவன் அதை எவ்வாறு வெறுக்கிறார் என்பதை அது நமக்கு தெளிவுபடுத்துகிறது. சிலுவை மிகவும் தீவிரமானது, ஏனென்றால் அது மனிதகுலத்தின் நம்பமுடியாத மதிப்பை வெளிப்படுத்துகிறது. பாவம் மற்றும் மரணத்திலிருந்து நம்மை மீட்டெடுக்க, தேவன் சிலுவையில் அறையப்பட வேண்டியது அவசியமாகயிருந்தது. இது மனிதகுலத்தின் மதிப்பைக் குறிக்கிறது. நாம் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறோம், நாம் எதற்கும் தகுதியற்றவர்கள் என்று நினைக்கிறோம், ஆனால் நாம் அவருக்கு மிகவும் மதிப்புமிக்கவர்கள், விலைமதிப்பற்றவர்கள் என்று தேவன் நமக்குச் காண்பிக்கிறார். எப்படி ஒரு வியாபாரி எல்லாவற்றையும் விற்று விலையுயர்த்த முத்து வாங்குகிறாரோ, அதுபோலவே தேவன் நமக்காக எல்லாவற்றையும் விட்டு பூமிக்கு வந்தார். சிலுவை அவரது அன்பின் களியாட்டத்தை பிரதிபலிக்கிறது, அவர் பாவிகளை எந்த அளவிற்கு நேசிக்கிறார் (தந்தையின் பைத்தியக்காரத்தனமான அன்பு). அவர் எல்லோரையும் விட அதிகமாக நம்மை பைத்தியக்காரத்தனமாக நேசிக்கிறார், அதன் ஆழத்தை நம்மால் உணர முடியாத வகையில் இருக்கிறது. இந்த அன்பு பாவிகளாகிய நம்மை மீட்டு உயிர்ப்பிக்க உதவியது. வரலாற்று ரீதியாக, சிலுவையில் அறையப்படுவது மிகவும் நியாயமற்ற நிகழ்வு. மிக உயர்ந்த நீதிபதியாக தேவன் இருப்பதால் அநியாயத்தை அநியாயத்துடன் நியாயப்படுத்தவில்லை. அவர் உருவாக்கிய அனைத்தையும் அவர் எரித்திருக்கலாம், மாறாக, அவர் தனது இரத்தத்தால் நம்மைச் சுத்திகரித்து, மரணத்திலிருந்து நம்மைக் காப்பாற்றத் தேர்ந்தெடுத்தார்.
மொழிபெயர்த்தவர்,பொன்சிபா.வி