கடைசி காலம் – தொடர் செய்திகள்

Sam T Varghese

09 February, 2023

Transcript of this message is also available in Malayalam

பகுதி 1- எச்சரிக்கையாயிரு, விழித்திரு, பகுத்தறி 

(பாஸ்டர் சாம் வர்கீஸ்)

கடைசி காலத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? இயேசுவின் வார்த்தை என்னும் கண்ணாடி வழியாக கடைசி காலம் என்ன என்பதைப் பார்ப்போம். மக்கள் எப்பொழுதும் இறுதிக் காலத்தில் ஆர்வமாக உள்ளனர். இயேசுவின் சீஷர்களுக்கும் கடைசி காலம் மற்றும் இயேசுவின் இரண்டாம் வருகை பற்றிய கேள்வி இருந்தது.

மத்தேயு 24:3 OT 

3 பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.

வஞ்சகங்களுக்கு எதிராக கவனமாக இருக்க வேண்டும் என்று இயேசு சீடர்களை எச்சரிக்கிறார். இந்த எச்சரிக்கை சுவிசேஷங்கள் முழுவதும் எதிரொலிக்கிறது. 

மத்தேயு 24:4 OT 

4 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;

மாற்கு 13:5 OT 

5 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

லூக்கா 21:8 OT 

8 – அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.

இரட்சகர் என்று தன்னைத் தானே விழித்துக்கொண்டு வரப்போகும் பலரைப் பற்றி இயேசு தம் சீடர்களை எச்சரிக்கிறார்.

கள்ளத் தீர்க்கதரிசிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்களைப் போல இருக்கும் கள்ளத் தீர்க்கதரிசிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

மத்தேயு 7:15-24 OT 

15 கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

16 அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

17 அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.

18 நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.

19 நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.

20 ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.

21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.

23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

இப்படி, இயேசு சுவிசேஷங்களில் கள்ளத் தீர்க்கதரிசிகளைப் பற்றி எச்சரித்துள்ளார். தீர்க்கதரிசிகளுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள், ஆனால் கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாய் இருங்கள். தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசிகளை அடையாளம் காண்பதற்கான வழி அவர்கள் செய்யும் அற்புதங்களால் அல்ல, மாறாக அவர்கள் கனிகளைக் கொண்டு. நீங்கள் பல்வேறு நிலைகளில் கடவுளைச் சேவித்துக்கொண்டிருக்கலாம், ஆனால் நீங்கள் கனிகளால் மட்டுமே நீங்கள் அறியப்படுவீர்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு நல்ல பிரசங்கியாக இருக்கலாம், ஆனால் உங்கள் உள்ளே இருப்பது கனி மட்டுமே. பழம்தரும் மரத்தின் இந்த உவமையின் மூலம், நல்ல கனிகளைக் கொடாத ஒவ்வொரு மரமும் வெட்டப்பட்டு நெருப்பில் போடப்படும் என்பதை இயேசு தெளிவாகக் கூறுகிறார். எனவே அவர்களின் கனிகளால் மட்டுமே நீங்கள் அவர்களை அடையாளம் காண்பீர்கள். பிதாவின் சித்தத்தின்படி நடப்பவர்கள்தான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள். எனவே நாம் பிசாசுகளைத் துரத்தினாலும், ஊழியம் செய்தாலும், தீர்க்கதரிசனம் உரைத்தாலும் அல்லது இயேசுவின் நாமத்தில் அற்புதங்களைச் செய்தாலும், அவர் நம்மை ஒருபோதும் அறியவில்லை என்று கூறுவார்! நாம் கவனமாக இருக்க வேண்டும். நம் சொந்த வாழ்க்கையை சரிபார்த்து, கடவுளுக்குப் பிரியமானதைச் செய்வதன் மூலமே நல்ல கனியைத் தர முடியும்.

கள்ள கிறிஸ்துகளை நம்பாதீர்கள் 

மத்தேயு 24:23-26 OT 

23அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.

24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

25 இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.

26 ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.

பலர் தாங்கள் தான் கிறிஸ்து என்று கூறுவார்கள். உலகில், மேசியா என்று கூறியவர்கள் கடந்த காலங்களில் பலர் இருந்துள்ளனர். தற்போதும் கூட, இதை இன்னும் பலர் உரிமை கொண்டாடுகிறார்கள் – கேரளாவிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் கூட எங்களிடம் உதாரணங்கள் உள்ளன. எதிர்காலத்தில் பலர் தாங்கள் தான் கிறிஸ்து என்று கூறுவார்கள்.

பொய்யான அடையாளங்களையும் அற்புதங்களையும் நம்பாதீர்கள்

மத்தேயு 24:24 (OT)

24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

கள்ள கிறிஸ்துகளுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் எதிராக நாம் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். உண்மையான விசுவாசிகளை தவறாக வழிநடத்துவதற்கு பெரிய அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக தோன்றலாம். அதிக பக்தியும் வல்லமையும் கொண்ட தேவமனிதர்கள் வீழ்ந்தனர். அவர்களின் எலும்புகளின் மேல் நாம் ஓடுகிறோம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வசனத்தை நான் கவனமாக எடுத்துக் கொள்ளாவிட்டால், நானும் விழலாம். ஒரு உண்மையான விசுவாசி தேவனுடைய பெலத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

கிறிஸ்துவை சந்திக்க எங்கும் செல்ல வேண்டாம், அவர் வானத்தில் வருகிறார்!

மத்தேயு 24:26 (OT)

26 ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.

அவருடைய இரண்டாவது வருகையுடன் தொடர்புடைய மற்றொரு பொருத்தமான கேள்வி, இயேசு எங்கிருந்து வருவார்? இயேசு வானத்திலிருந்து வருவார், அவரைச் சந்திக்க நாம் எங்கும் செல்ல வேண்டியதில்லை.

நீங்கள் அடையாளங்களைக் காணும்போது, அவர் சமீபத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

மத்தேயு 24:33 (OT)

33 அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.

அந்த நாட்கள் எளிதாக இருக்காது. அப்போது அவர் வாசலில் இருக்கிறார்  என்று  அறிவோம்.

கர்த்தர் வரும் நாள் உங்களுக்குத் தெரியாது

மத்தேயு 24:42 (OT)

42 உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.

மத்தேயு 25:13 (OT)

13 மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

கர்த்தர் தாம் வரும் நாளையோ, நாழிகையையோ வெளிப்படுத்தவில்லை. மக்கள் இதை கணிக்க ஆரம்பித்தால் ஜாக்கிரதை! இன்று பலர், அவர் எப்போது வருவார் என்று கணிப்பதில் வெறித்தனமாக உள்ளனர். கடவுளின் பல மனிதர்கள் முன்னறிவிப்புகளைச் செய்திருக்கிறார்கள், அது பொய்யாகி, மற்ற விசுவாசிகளை தவறாக வழிநடத்துகிறது.

தயாராயிரு! புத்திசாலியாயிரு!

மத்தேயு 24:44 (OT)

44 நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.

இயேசு வரும் நாளும் நாழிகையும் நமக்குத் தெரியாவிட்டாலும், அவருடைய வருகைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். பத்து கன்னிகைகளின் உவமையில் கூறப்பட்டுள்ளபடி அவரது இரண்டாவது வருகை மணவாளனின் வருகையுடன் ஒப்பிடப்படுகிறது.

மத்தேயு 25:1-13(OT)

1 அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.

2 அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.

3 புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.

4 புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.

5 மணவாளன் வரத் தாமதித்தபோது அவர்கள் எல்லாரும் நித்திரைήயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.

6 நடுராத்திரியிலே: இதோ மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப்புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.

7 அப்பொழுது அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.

8 புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.

9 புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.

10 அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.

11 பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.

12 அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

13 மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

இந்த உவமையில் உள்ள புத்தியுள்ள  கன்னிகைகளைப் போலவே நாமும் தயாராக வேண்டும். இந்த நோக்கத்தில் இருந்து நம் கவனத்தை ஈர்க்கும் விஷயங்களை விட்டு விலக கற்றுக்கொள்ள வேண்டும்.  இறுதி மணி நேரத்தில் எண்ணெய் வாங்கக் ஓட கூடாது. இறுதி மணி நேரத்தில் மனந்திரும்பாதீர்கள், ஏனென்றால் அவர் முன்னதாக வரலாம்.. மனந்திரும்பக் காத்திருந்தால் நமக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். ஏமாந்து போகாமல், புத்தியுள்ள கன்னிகளைப் போல ஞானமும் ஆயத்தமுமாய் இருங்கள். நம் ஆண்டவரின் இரண்டாம் வருகைக்குத் தயாராகுங்கள். நீங்கள் தயாரா?

மொழிபெயர்த்தவர் Sis. Jebah Daniel