வார்த்தையின் முக்கியத்துவம்

2 கொரிந்தியர் 11:2-5

i) நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.

ii)ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.

iii) எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்.

2 கொரிந்தியர் 1:2-4

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 3.நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். 4.தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.

அவர் போதுமானவர்

தேவன் மற்றும் அவருடைய வார்த்தை எல்லாவற்றிற்கும் (உடல், ஆன்மீகம் மற்றும் உணர்ச்சி) போதுமானது என்று வேதம் கூறுகிறது. தேவனின் வார்த்தை அவரை கிருபை மற்றும் இரக்கத்தின் தகப்பன் என்று குறிப்பிடுகிறது. நீங்கள் ஒரு பிரச்சனையை சந்தித்தால், நீங்கள் தனியாக இல்லை, உங்களை நெருங்கிப் பிடித்து, உங்களுக்கு தோள் கொடுக்கும் ஒரு தந்தை உங்களுக்கு இருக்கிறார். யோபுவைக் தொடாதபடி தடுத்த தேவனுடைய தடையை அகற்றும்படி சாத்தான் தேவனிடம் கேட்டான், அந்தத் தடை அவருடைய கையைக் குறிக்கிறது. அவருடைய கரம் நம்மைப் பாதுகாக்கிறது ,நமக்கு தீங்கு விளைவிக்கும் எல்லாவற்றிலிருந்தும் நம்மைக் காக்கிறது. பெரும்பாலும், நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். நம்முடைய எல்லா ஜெபங்களுக்கும் பதில் “அவருடைய கிருபை நமக்குப் போதுமானது” என்பதே என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும் என தேவன் விரும்புகிறார். நாம் பலவீனமாக இருக்கும்போது கூட, பவுலைப் போலவே, நம்முடைய கர்த்தரின் பலத்தை நாம் காண வேண்டும். தேவன் கொடுத்த ஆறுதலைத் தேவைப்படுபவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும் வகையில், நம்முடைய கஷ்டங்களில் அவர் நம்மை ஆறுதல்படுத்துகிறார்.

i) சபையை கற்புள்ள கன்னிகையாக மணவாளன் கிறிஸ்துவுக்கு கொடுத்தால்

நற்செய்தி நமக்குப் பிரசங்கிக்கப்படும்போது, நம்முடைய முதன்மையான மற்றும் ஒரே கவனம் இயேசுவின் மீது இருக்க வேண்டும். நம் கண்கள் எப்பொழுதும் அவர் மீது மட்டுமே இருக்க வேண்டும், நம் சுற்றுப்புறம் அல்லது போதகர் மீதோ அல்ல. எவரேனும் பிரசங்கிக்கும்போது, ஒரு கற்புள்ள கன்னியை தன் கணவனுக்குக் காண்பிப்பது போல, கிறிஸ்துவுக்கு சபையை சமர்ப்பிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. கற்புள்ளவர்களாக இருப்பதற்கு, நாம் பரிசுத்தமாகவும், உண்மையுள்ளவர்களாகவும், பிரித்தெடுக்கப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அவருடைய பிரசன்னத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன், இந்தப் பண்புகள் நம்மிடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

எபேசியர் 5:23-27

23.கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். 24.ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். 25.புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, 26.தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், 27.கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

கிறிஸ்துவுக்காக உங்களை வேறுபடுத்துவது எப்படி?

வார்த்தையே உங்களைக் கழுவிச் சுத்தப்படுத்துகிறது. பெரும்பாலும். தேவனுடைய வார்த்தையைக் கேட்பதைத் தவிர ஆராதனை மற்றும் வேறு எல்லாவற்றிலும் நாம் உற்சாகமாக பங்கு கொள்ளுகிறோம். சில சமயங்களில் சீடர்கள் இயேசுவிடம், அவர் பிரசங்கிப்பது (வார்த்தை) புரியவில்லை என்று சொன்னார்கள்; இருப்பினும், அவர் அவர்களிடம் தான் பேசிய வார்த்தைகள் ஆவி மற்றும் ஜீவனால் நிறைந்தவைகள் (யோவான் 6:63) என்று பதிலளித்தார். வார்த்தை சுத்தப்படுத்துகிறது; வார்த்தையே ஆவி. நீங்கள் மனமில்லாமல் இருந்தாலும் அல்லது உங்கள் முழு கவனம் இல்லாவிட்டாலும், ஆவி உங்களில் இன்னும் வேலை செய்கிறது.

சபை ஆராதனைகளில் கலந்துகொள்வதன் நோக்கம் என்ன?

உங்கள் இருதயத்தின் ஜெபம் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்க ஏங்க வேண்டும், இதனால் நீங்கள் உங்களுக்கு உண்டான அனைத்தையும் கொண்டு அவருக்கு சேவை செய்து பரிசுத்தமாக வாழலாம்.

சபைகள் ஏன் மகிமை அடையவில்லை?

ஏனெனில் அவருடைய வார்த்தையின் மூலம் நாம் சுத்திகரிக்கப்படவில்லை. வார்த்தைக்கு ஒரு தரநிலை உள்ளது (புள்ளி, சுருக்கம், அல்லது கறைதிரை இல்லாமல்) அது நம் அனைவருக்கும் குறைவாக உள்ளது. நீங்கள் செல்லும் சபை உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அங்கு பிரசங்கிக்க படும் வார்த்தையைக் கேட்பதன் மூலம் தான். ஏதோ வார்த்தைகளால் அல்ல, நீங்கள் களங்கமோ கறையோ இல்லாமல் பரிசுத்தமாக காணப்படுகிற விதத்தில் உங்களை வேறுபடுத்தும் வார்த்தையின் மூலம் தான்.

எது தேவனை கோபப்படுத்துகிறதோ அது நம்மைக் கோபப்படுத்த வேண்டும். யாராவது நமக்கு வேறு இயேசுவைப் பிரசங்கித்தாலோ, அல்லது வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தாலோ, அதில் ஒரு சிக்கலையும் காணாத வகையில் நாம் மிகவும் சகிப்புத்தன்மையுள்ளவர்களாகிவிட்டோமா?

ii) சாத்தானின் வஞ்சனை

ஏவாளுக்கு எப்படிச் வஞ்சிதானே அப்படித்தான் சாத்தான் உன்னிடம் வஞ்சிப்பதற்காக வந்து கேள்வி கேட்பான். சாத்தான் தேவனுடைய வார்த்தையை மறுத்தான் (ஏவாள் தடைசெய்யப்பட்ட கனியை உட்கொண்டால் அவள் மரிக்கமாட்டாள் என்று சொன்னதன் மூலம்). நாம் வார்த்தையால் மீண்டும் பிறந்தோம், வார்த்தையால் பிரித்தெடுக்கப்பட்டோம், வார்த்தையால் சுத்திகரிக்கப்படுகிறோம், வார்த்தையின் மூலம் கிறிஸ்துவுக்கு வழங்கப்படுவோம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். தேவன் பதிலளிக்கும் விதத்தில் வார்த்தையைக் குறித்து கேள்வி கேளுங்கள். உங்கள் தர்க்கத்தைப் பயன்படுத்தி அதை ஆராய வேண்டாம், ஏனென்றால் தேவனின் தர்க்கம் மனிதகுலத்திற்கு கற்பனை செய்ய முடியாத ஒன்று. தேவனுடைய வார்த்தை இருபுறம் கருக்குள்ள பட்டயம், அது உங்களுக்குள் ஊடுருவி, உங்களை அடையாளம் காண முடியாத வகையில் மாற்றுகிறது. கற்பிப்பதற்காக வார்த்தையைக் கற்றுக்கொள்ளாதீர்கள், வாழ்வதற்காக கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எந்த நிலையில் நிற்கிறீர்கள் என்பதை அறிய தேவன் எப்போதும் உங்களைச் சோதிப்பார்.

iii )மற்றொரு இயேசு, மற்றொரு சுவிசேஷம்

ஜெல்லிமீன் கிறிஸ்தவம்: எலும்பு, தசை அல்லது நரம்பு இல்லாத ஒரு கிறிஸ்தவம், பரிகாரம் அல்லது ஆவியானவரின் செயல், நியாயப்படுத்துதல் அல்லது தேவனுடனான சமாதானத்தின் வழி பற்றி எந்த வித்தியாசமான போதனையும் இல்லாமல் – ஒரு தெளிவற்ற,ஈரமான, மூடுபனி சார்ந்த கிறிஸ்தவம், இதில் “நீங்கள் தாராள மனப்பான்மை உடையவராகவும் கனிவாகவும் இருக்க வேண்டும். எந்த மனிதனின் கோட்பாட்டு கருத்துக்களையும் நீங்கள் கண்டிக்கக்கூடாது. நீங்கள் அனைவரும் சரியானவர்கள், யாரும் தவறில்லை என்று கருத வேண்டும்.

தேவன் இல்லாததால் பல எழுப்புதல்கள் நிலைபெறவில்லை. நாம் தேவனுடைய வார்த்தையைக் கற்பிக்க முடியாவிட்டால், எழுப்புதலுக்காக நாம் ஜெபிக்கக்கூடாது.

தேவாலயத்திற்குள் மற்றொரு இயேசு போதிக்கப்படுவதாக பவுல் கூறுகிறார். உண்மையானதையும் பொய்யானதையும் எவ்வாறு வேறுபடுத்துவது?

யோவான் 14:6

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

நீங்கள் இயேசுவிடம் செல்லும்போது, பிதாவிடம் வந்தடைவீர்கள். இயேசுவைத் தவிர வேறு யாராலும், எவற்றாலும் பிதாவை அடைய முடியாது. அவர்தான் ஒரே வழி.

மத்தேயு 5:14

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

2 கொரிந்தியர் 13:11

கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.

கொரிந்திய சகோதரர்களை பூரணமானவர்களாக இருக்கும்படி கேட்டுகொண்டு பவுல் தனது குறிப்பை முடிக்கிறார். பரிபூரணம் என்பது கிறிஸ்துவில் வாழ்வதைக் குறிக்கிறது. தேவன் உங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும்போது, ​​நீங்கள் சவாலை ஏற்றுக்கொண்டு அவரைப் போலவே மாற வேண்டும் என்று அவர் விரும்புகிறார். பவுல் எப்போதும் தன்னை முழுமைக்கு தள்ளினார். எப்படி?

பிலிப்பியர் 3:12-14

நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். 13 சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறைந்து, முன்னானவைகளை நாடி, 14 கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

பவுல் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்று மட்டும் போதிக்கவில்லை. அவர் முழுமைக்கு நேராக நம்மை அழுத்தமாக தள்ளுகிறார். தேவனுக்கு மகிமை தரும் வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் சவால்களை கடந்து செல்லும்போது, செய்ய விரும்பாத ஒன்றை தேவனுடைய ஆவி உங்களை அழுத்துவதை போல் நீங்கள் கண்டால், அதை பிடித்துக் கொள்ளுங்கள், அவருடைய கிருபை உங்களுக்கு போதுமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள்; அவர் மூலம், அனைத்தும் சாத்தியமாகும். உங்களுக்கு உன்னதமான அழைப்பு உண்டு என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். கிறிஸ்துவின் நிமித்தம் தனக்கு நேரிடும் அனைத்திலும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பவுல் கூறுகிறார்.

யோவான் 15:27

நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.

நீங்கள் சபைக்கு வந்து குழந்தை அடிகள் எடுக்கும்போது, கிறிஸ்துவில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு மாதிரியாக இருக்கும் தேவனின் மனிதர்கள் சபைகளில் இருக்கிறார்கள்; அவர்கள் தான் பரிபூரணத்திற்கு எடுத்துக்காட்டு என்று அர்த்தமல்ல, தேவனின் பாதையில் வாழ்வது எப்படி என்பதை அவர்கள் உங்களுக்குக் காட்டுவார்கள்.

யோவான் 16:7-11

7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். 8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். 9 அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், 10 நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், 11 இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.

உங்களைத் தண்டிப்பதற்காக அல்ல, நீதியின் வழியைக் காட்டுவதற்காகவே, அவர் ஒவ்வொரு காரியத்திலும் உங்களைக் நியாயம்தீர்ப்பார். நீங்கள் கிறிஸ்துவில் ஜீவிக்காதபோது நியாயத்தீர்ப்பு (விளைவுகள்) உண்டு என்று பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குச் கூறுவார்.

ரோமர் 8:29

தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

நீங்கள் செயல்படும் முன் பரிசுத்த ஆவியானவர், இயேசுவானவர் இப்படிச் செயல்படமாட்டார் என்று உங்களுக்கு நினைவூட்டுகிறார். பரிசுத்த ஆவியானவரின் வல்லமை அதன் உண்மையான அர்த்தத்தில் உங்களை உலகத்திலிருந்து வேறுபடுத்துகிறது, ஏனென்றால் நீங்கள் உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல.

தீத்து 2:11-14

11 ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, 12 நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, 13 நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. 14 அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.

நாம் பரிசுத்தமில்லாத உலகில் வாழ்கிறோம்.அது நமக்கு தேவபயம் வேண்டாம் என்றும், உலக இச்சையை கொள்ளலாம் என்றும் கற்றுத் தருகிறது. நீங்கள் உலகத்தையும் உலகப் பொருட்களையும் நேசித்தால், தேவனில் அன்புகூறமாட்டீர்கள். உலகப் பொருட்களை விட்டுக்கொடுப்பது எளிதான காரியம் அல்ல. இதனால்தான் உங்களுக்கு அனுதினமும் தேவனின் வார்த்தை தேவை; அது உங்களை சுத்தப்படுத்தி சுத்திகரிக்கும் வல்லமை கொண்டது. நீங்கள் அவருடைய வார்த்தையை எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களுக்கு ஆத்துமபாரத்தை தந்து, தரிசனங்களையும் தருகிறது. அவருடைய வாக்குத்தத்தங்களை குறித்து உங்களுக்கு ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கை உண்டு: அதுவே அவருடைய வருகை.

நீங்கள் தனித்தன்மை உடையவர்கள், நல்ல செயல்களில் ஆர்வம்கட்டுபவர்கள் என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது. நீங்கள் செய்யும் வேலைக்கான பலன் உங்களுக்கு கிடைத்தாலும் அல்லது அதிலிருந்து வேறு ஏதாவது பதில் கிடைத்தாலும் பரவாயில்லை. நீங்கள் தேவனுக்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.

2 பேதுரு 3:17

ஆதலால் பிரியமானவர்களே, இவைகள் முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,

நம்முடைய நித்தியகிரீடங்களை யாரும் பறித்து கொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று வேதம் கேட்டுக்கொள்கிறது. நம் வாழ்வின் மிக முக்கியமான பகுதி வசதியாக வாழ்வது அல்ல, பரிசுத்தமாக வாழ்வது தான். நமது நிலையை நிலைநிறுத்துவது முக்கியம்; உங்கள் செயல்கள் தேவனை (தெய்வீக பரிசு) சந்திப்பதற்கு உங்களை வழிநடத்துமா? என்று தொடர்ந்து கேள்வி எழுப்புங்கள். தேவன் தாமே உங்களை தமது வார்த்தையினால் ஆசீர்வதிப்பாராக, ஆமேன்.

மொழிபெயர்த்தவர்,

பொன்சிபா.வி