புது திராட்சரசம்

House of Prayer
Apr 22 · 1 minute read

சகோ. செறியன் கே பிலிப்

வேதப்பகுதி: மத்தேயு 9:14-17

உபவாசம் என்பது பொதுவாக பழைய ஏற்பாட்டில், துக்கம் அல்லது மனந்திரும்புதலின் காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டது. உபவாசத்தை   கடைபிடிக்கும் நபர் அல்லது மக்கள் தேவனுடன் நெருக்கமாக இருக்கவும், அவருடைய பிரசன்னத்தை உணரவும், அவரை அனுபவிக்கவும் விரும்புவதால் தான் உபவாசத்தை கடைபிடித்தனர்.

உபவாசம் பரிசுத்தத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. உபவாசம் உண்மையில் ஒரு ஆவிக்குரிய ஒழுக்கம் என்பதை இயேசுவும் தனது மலைப்பிரசங்கத்தில் விளக்கினார்.

யோவான் ஸ்நானகரின் சீஷர்கள் இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்டனர்; “நாங்களும் பரிசேயர்களும் அடிக்கடி உபவாசம் இருக்கிறோம், ஆனால் உம்முடைய சீஷர்கள் உபவாசிக்காமல் இருப்பது ஏன்?” என்று.

அதற்கு இயேசு, “மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள் என்றுக் கூறினார்   

யோவானின் சீஷர்களுக்கு இயேசு கூறிய பதில், தேவனை பின்பற்றுபவர்கள் இப்போது ஒரு புதிய வழிமுறையில் தேவனை பின்பற்றுவார்கள் என்பதைத் தெளிவாக்குகிறது.

முன்பு, ஆண்டவரை பின்பற்றுகிறவர்கள், தேவனை தேடுவதற்காகவும் அவருடைய பிரசன்னத்தை உணருவதற்காகவும் உபவாசம் இருப்பார்கள்; இப்போது, தேவனை பின்பற்றுபவர்கள் இயேசுவுடன் இருப்பதன் மூலம் தேவனின் பிரசன்னத்தை அனுபவிக்க முடியும்.

இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, இயேசு தம்முடைய போதனைகளைப் புரிந்துகொள்ள உதவும் மூன்று உதாரணங்களைத் தருகிறார்.

  • முதல் உதாரணம் ஒரு திருமண கொண்டாட்டம். (.15)

இயேசுவின் போதனைப்படி, ஒரு திருமணத்திற்கு வந்துள்ள விருந்தினர்கள் திருமணம் நடக்கும்போது துக்கிப்பதில்லை. திருமணத்தில் அனைவரும் துக்கமுகமாய் இருப்பதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? மணவாளனின் வருகை எல்லோருக்கும் மகிழ்ந்து கொண்டாடும் தருணமாக அமையும். இந்த உவமையில் இயேசுதான் மணவாளன், அவரைப் பின்பற்றுபவர்கள் திருமண விருந்தாளிகள் ஆவர்.

இயேசு கூறியது என்னவென்றால், அவர்கள் தேவனின் பிரசன்னத்தை உணருவதற்காக உபவாசம் இருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் கர்த்தர் அவர்களுடன் கூட இருக்கிறார்! இது களிகூரும் நேரமாகும்!

  • இரண்டாவது உவமை புதிய மற்றும் பழைய ஆடைகளைப் பற்றி பேசுகிறது. ( .16)

யாரும் பழைய துணியை புதிய ஆடையுடன் இணைப்பதில்லை.  இணைத்தால், அதினோடே இணைத்த துண்டு புதிய வஸ்திரத்தைக் கிழிக்கும், பீறலும் அதிகமாகும். இயேசு மீண்டும் ஒருமுறை “ஒரு புதிய வழி தோன்றியிருக்கிறது” என்பதை நிரூபிக்கிறார். பழைய உடன்படிக்கை, அதன் நோக்கத்தை ஏற்கனவே நிறைவேற்றிவிட்டது. அதனால் பழைய உடன்படிக்கையை புதிய உடன்படிக்கையுடன் “இணைக்கக்கூடாது”. அவைகள் ஒருக்காலும் ஒத்துப்போவதில்லை.

  • மூன்றாவது உவமை, புதிய திராட்சரசத்தை பழைய துருத்திகளில் வைக்கும் செயல்முறையை சித்தரிக்கிறது. (வ .17)

துருத்திகள் திராட்சரசத்தை சேமிக்கப் பயன்படுத்தப்படும் தோல் பைகளாகும். திராட்சரசம் புதியதாக இருக்கும்போது துருத்தியில் ஊற்றப்படும். திரட்சைரசம் பழமையாகும்போது, அது துருத்தியை மேலும் விரிவடையச் செய்யும். திராட்சைரசம் சிறிது காலத்திற்குப் பிறகு அதன் உச்சத்திற்கு விரிவாக்கிவிடும். புதிய திராட்சரசம் பழைய துருத்தியில் வைப்பது முட்டாள்தனம், ஏனென்றால் பழைய துருத்தி விரிவடைவதற்கு இடமில்லாமையால் வெடித்து திராட்சைரசத்தை சிந்தப்பண்ணும்.

தேவனை பின்பற்றுபவர்களுக்கு ஒரு புதிய வழி இருக்கிறது என்பதை நிரூபிக்க, கடைசி இரண்டு எடுத்துக்காட்டுகளும் இயேசுவால் பயன்படுத்தப்பட்டது. மேலும் புதியது மற்றும் பழையது கலந்துவிடக்கூடாது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. 

பரிசேயர்களும், யோவானும் அவருடைய சீஷர்களும், இன்னும் பழைய முறையிலேயே காரியங்களைச் செய்கிறார்கள். அவர்கள் சடங்குகள், சட்டங்கள் மற்றும் மரபுகளை எதிர்பார்க்கிறார்கள். 

சம்பிரதாயமான மதத்தின் பழைய முறைமைகளில் புதியவற்றை இணைப்பதற்காக இயேசு கிறிஸ்து வரவில்லை. பழைய மற்றும் புதிய விஷயங்களைச் கலப்பதற்காகவும் இயேசு வரவில்லை. அவர் முற்றிலும் புதிய ஒரு முறைமையை கொண்டு வந்துள்ளார்.

இயேசு கிறிஸ்து, “ஒரு புதிய வழி வந்திருக்கிறது!” என்கிறார். “அவரே அந்த புதிய வழி!

பெற்றோரை மதித்தல் போன்ற முக்கியமான கட்டளைகளை புறக்கணித்துவிட்டு, சம்பிரதாயமான உபவாசம், சாப்பிடுவதற்கு முன் கைகழுவுதல், ஆலயத்துக்கு சடங்காச்சாரமாக கொடுப்பது போன்றவற்றுக்கு இனி முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. மாறாக இயேசுவுக்கும், அவருடைய வழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!

புதிய திராட்சைரசத்தின் வேதாகம முக்கியத்துவங்கள்.

  1. திராட்சைரசம் பரிசுத்த ஆவி மற்றும் தேவனின் அசைவாடலை குறிக்கிறது.

ஆவியினால் நிரம்புதல், புதிய ஏற்பாட்டில் திராட்சைரசம் அருந்துவதற்கு ஒப்பிடப்படுகிறது. “துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து” என்று எபேசியர் 5:18 குறிப்பிடப்பட்டுள்ளது. விசுவாசிகளாக, நாம் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட வேண்டும், அவரால் ஆளப்பட வேண்டும், அவரால் கட்டுப்படுத்தப்பட வேண்டும், மேலும் நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அவருடைய வழிநடத்துதலுக்கு உட்பட்டு வாழ வேண்டும்.

  1. புதிய திராட்சைரசம் தேவன் தொலைந்து போன நம்மிடம் கொண்ட அன்பையும், அவருடனான நெருக்கத்தையும் கூறுகிறது.

மரபுகள் மற்றும் சடங்குகள் தேவனுடனான நெருக்கத்திலிருந்து நம்மை விலக்கி இழுத்து செல்லும். “என்னை இழுத்துக்கொள்ளும் உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள் “என்று உன்னதப்பாட்டு 1:4 யில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவன் நம்மை அவருடனான நெருங்கிய உறவுக்கு அழைக்கிறார். “நான் உங்கள் மிகப்பெரிய சந்தோஷமாய் இருப்பேன்,” என்று அவர் சொல்லுகிறார். அவர் தான் நமது மிகப்பெரிய சந்தோஷமாய் இருக்கிறாரா?

  1. திராட்சைரசம் அழுத்தத்திற்கு உள்ளாகி தயாரிக்கப்படுகிறது!

திராட்சைப்பழங்கள் ஆலையில் நசுக்கப்படுகின்றன, மேலும் சில சமயங்களில் மக்கள் திராட்சைகளை மிதித்து மதுவை பிரித்தெடுக்கிறார்கள். நீங்கள் நசுக்கப்படும் தருணங்களை கடந்து செல்கிறீர்களா? நீங்கள் மற்றவர்களால் மிதிக்கப்படுகிறீர்களா? அப்படியென்றால் மகிழுங்கள்! தேவன் உங்களை புதிய மற்றும் சுவையான திராட்சைரசமாக மாற்றுகிறார்.

  1. இது அறுவடையின் காலம்.

திராட்சைப்பழங்கள அறுவடை, சமூகத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் காலமாக இருந்தது என்று எரேமியா 48:33 மற்றும் 2 யோவான்- யில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேதாகமத்தில் திராட்சைரசம் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தையும் குறிக்கிறது ((சங்கீதம் 104:15; 2 யோவான்). ஆசீர்வாதமும், அருளும் கூட புதிய திராட்சரசத்துடன் தொடர்புடையவையாக உபா 7:12-13 யில் கூறப்பட்டுள்ளது.

  1. இது அற்புதங்களின் கால மாகவும் இருக்கிறது (யோவான் 2:10)

கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சரசமாக மாற்றினார். இயேசு செய்த அற்புதத்தைக் கண்டு அனைவரும் வியந்தனர். மணவாளன் நமக்குள் இருக்கும்போது ​​அற்புதங்கள் நிகழ்கின்றன. பேதுரு தனது பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி வெளியே வந்து, இயேசுவின் அழைப்புக்கு பதிலளித்தபோது, அவரால் தண்ணீரில் நடக்க முடிந்தது. விசுவாசம் என்பது வெறும் அடுத்த அடியை எடுத்து வைப்பதாகும்

எனவே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு ஏற்ற பாத்திரங்களாக இருப்போம். சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் உங்களுக்கு வழங்க இயேசு விரும்புகிறார்.

மொழிபெயர்த்தது,

பொன்சிபா. வி

yt subscribe
House of Prayer, Trivandrum
2.08K subscribers
Subscribe

Related Articles

Subscribe to our newsletter