நன்றி செலுத்தும் செய்தி – 2022

2021 வேறு எந்த ஆண்டும் இல்லாத ஒரு ஆண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். இயற்கை பேரழிவுகள், தொற்றுநோய்கள் மற்றும் பொருளாதார இழப்புகள் போன்ற பல சூழ்நிலைகள் இருந்தன. 2022-ல் என்ன ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்று சிந்தித்தால், அதைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், 2021-ல் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் ஏன் நிகழ்ந்தன என்பது கூட நமக்குத் தெரியாது. இப்போது நம்மிடம் பதில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வேதபுஸ்தகத்தில் ரோமர் 8:28 இவ்வாறு கூறுகிறது

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.”

அவருடைய நோக்கத்தின்படி நாம் அழைக்கப்பட்டிருந்தால், சகலத்தையும் தேவன் நமக்கு நன்மையாக மாற்றுவார். 

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன் உலகெங்கிலும் வெளிப்படும் நெருக்கடிகள் மற்றும் பேரழிவுகள், இறுதிக் காலத்தின் அடையாளங்கள் என்று வேதம் தெளிவாக விவரிக்கிறது. இந்த எல்லா நெருக்கடிகளின் மத்தியிலும், நமக்கு ஒரு எதிர்காலம் உண்டு என்றும், நம்முடைய தேவன் மீண்டும் வந்து தம்முடைய மணவாட்டியை தம்முடன் அழைத்துச் செல்வார் என்றும் நமக்கு ஒரு பெரிய நம்பிக்கை உண்டு.

எனவே, 2022-ல் சபை என்ன செய்ய வேண்டும்?

இன்று திருச்சபையின் இரண்டு பெரிய பணிகள் என்னவென்றால்: மணவாட்டியை ஆயத்தப் படுத்துதல் மற்றும் நற்செய்தியை அறிவித்தல். இது ஒரு புத்தாண்டின் கருப்பொருள் மட்டுமல்ல; இனி வருங்காலத்திற்கும் தேவாலயத்தின் கருப்பொருளாக இருக்கும்.

  1. மணவாட்டியை ஆயத்தப் படுத்துதல்

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக நம்மையும், நமது சக கிறிஸ்தவர்களையும் ஆயத்தப் படுத்துவதே நமது மேலான முன்னுரிமையாக இருக்க வேண்டும்.. தொற்றுநோய் உலகை மிகவும் கடுமையாக தாக்கியபோது, ​​ தேவாலய கட்டிடங்கள் மூடப்பட்டாலும் வீடுகள் திறக்கப்பட்டன. இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படி தேவன் ஜனங்களின் இருதயங்களை திறந்தார். ஜனங்கள் தங்கள் வீடுகளில் சிறு குழுக்களாக ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கத் தொடங்கினர்; மேலும் ஒவ்வொரு வீடும் அதன் சொந்த உரிமையில் ஒரு தேவாலயமாக மாறியது. இனி வரும் நாட்களில், கூட்டங்களை நடத்த போதகர்கள் இருக்க மாட்டார்கள். விசுவாசிகள் தேவனுடைய பிரசன்னத்தில் அமர்ந்து, தேவனுடைய வார்த்தையைப் பகிர்ந்துக்கொண்டு, ஒவ்வொருவரும் மற்றொருவரின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, விசுவாசத்துடன் ஜெபிப்பார்கள். தேவன் ஜெபங்களுக்குப் பதிலளித்து அற்புதங்களைச் செய்வார்.

  1. நற்செய்தியை அறிவித்தல்

இயேசுவைப் பற்றி இதுவரை கேள்விப்படாத அநேக ஜனங்களை, திருச்சபை அணுக வேண்டும். சுவிசேஷம் அறிவிப்பது என்பது நம் நாட்டில் நடைமுறையில் இனி எளிதான காரியமாய் இருக்காது. உலக வரலாற்றைப் பார்ப்போமானால், ​​தேவாலயம் துன்புறுத்தப்பட்ட சகல இடங்களிலும் சபைகள் வலுப்பெற்றதைக் காணலாம். இனி வருங்காலங்களில் மேடைகளில் நின்று நற்செய்தியை அறிவிக்க கூடாமற் போகலாம்; என்றாலும் நம்முடைய சாட்சிகள் ஜனங்களை இயேசுவிடம் நெருங்கி வரவழைக்க போதுமானதாக இருக்கும்.

  • உங்கள் வாழ்க்கையை தகுதியானதாக எண்ணாதீர்கள்!!

அப்போஸ்தலர் 20:24-ல் பவுல் கூறுகிறதாவது,

“ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.”

நம் வாழ்க்கையை விலைமதிப்பற்றதாகவும், தகுதிக்குரியதாகவும் கருதுகிறோம். ஆதலால், நம் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எதையும் செய்ய பயப்படுகிறோம். 1920-ல் ஸ்பானிஷ் காய்ச்சல் உலகைத்தை தாக்கியபோது, சபைதான் முதலில் வெளியேச் சென்று நோயுற்றவர்களைக் கவனித்து, அவ்வேளையில் தேவையான அனைத்தையும் செய்தன. 2022-ம் ஆண்டு தேவனுடைய சபைக்கு கடினமான ஆண்டாக இருக்கும். தாவீது தன்மீதுள்ள தேவனுடைய அபிஷேகத்தோடு, கோலியாத்தை முறியடிக்க தைரியமாக சென்றதுப் போல, உலகம் முழுவதற்கும் சவாலாக இருக்கும் இந்த தொற்றுநோய்க்கு எதிராக சபைகள் புறப்பட்டுச் சென்று தேவனுடைய ராஜ்யத்தின் விரிவாக்கத்திற்காக உழைக்க வேண்டும்

  • நாம் ஆதியிலே கொண்டுருந்த அன்பை கைவிட்டோமோ?

வெளிப்படுத்தின விசேஷம் 2:4 ல்

“ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.”

ஆதியிலே தேவன் மேல் நாம் வைத்த அன்பையும், நம்மில் ஒருவருக்கொருவர் இருந்த அன்பையும் எங்கோ இழந்துவிட்டோம். இவ்வாக்கின் மெய்யான அர்த்தத்தை பார்ப்போமானால் தேவன் மீதும், ஒருவருக்கு ஒருவர் மீதும் நீங்கள் வைத்த உங்கள் முதல் அன்பை இழந்துவிட்டீர்கள். 

2021-ம் ஆண்டின் தொடக்கத்தில், தேவனை நேசித்த அதே அளவிற்கு நாம் இன்னும் அவரை நேசிக்கிறோமா? 

“உங்கள் சகோதரர்களையும், உங்கள் அயல்வீட்டாரையும், உங்கள் எதிரிகளையும் நேசிக்கவும்” என்று வேதாகமம் தெளிவாக கூறுகிறது. அவர்களை நேசிக்க வேண்டும் என்ற ஒரு காரியத்தை மட்டுமே தேவன் கேட்கிறார்.

இந்தப் புத்தாண்டில் நாம் ஒரு தீர்மானம் எடுப்போமா? “ஆண்டவரே, நான் முதலில் நேசித்ததைப் போலவே, உம்மையும் என் சகோதர சகோதரிகளையும், குறிப்பாக எங்கள் அயல்வீட்டாரையும், நண்பர்களையும் மற்றும் எங்கள் எதிரியையும் கூட நேசிக்க எனக்கு உதவி செய்யும்.”

  • நம் வாழ்க்கைக்கு ஒரு வழக்கமான அடிப்படையில் ஆவிக்குரியப் பரிசோதனை தேவை

நாம் அனைவரும் வழக்கமான சரீரப் பரிசோதனை செய்கிறோம் அல்லவா? ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்க்கையை உறுதி செய்வதற்காக நம்மை நாமே தொடர்ந்து ஆவிக்குரியப் பரிசோதனை செய்து கொள்கின்றோமா?

2 கொரிந்தியர் 13:5 இவ்வாறு கூறுகிறது,

“நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்.”

இங்கே, பரீட்சை மற்றும் சோதனை  ஆகிய இரண்டு வார்த்தைகள் குறிப்பிடப்பட வேண்டும். நாம் இன்னும் நம் விசுவாசத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறோமா? கடந்த வருடத்தில், நாம் விசுவாசத்தினால் எத்தனை காரியங்களைச் செய்தோம்? எத்தனை ஜெபங்களை விசுவாசத்தோடு ஜெபித்தோம்?

பிலிப்பியர் 3:13-14 இவ்வாறு கூறுகிறது,

13. சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,

14. கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.”

நமது ஆவிக்குரிய வாழ்க்கையை நாம் ஆராய்ந்துப் பார்த்தால், ​​ நம் பரம அழைப்பையும், ஊழிய ஓட்டத்தை முடிப்பதற்கும் தடையாக இருப்பது நம் கடந்த காலம் தான் என அறிந்துகொள்வோம். நம்மை அழைத்த அழைப்பையும், நமக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தையும் சரியாக முடிக்க வேண்டுமென்றால் பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி இலக்கை நோக்கி ஓட வேண்டும்

  • உங்களை அல்ல, உங்கள் முன்னேற்றத்தையே மற்றவர்கள் காண வேண்டும்!!

1 தீமோத்தேயு 4:15 இவ்வாறு கூறுகிறது,

“”நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.”

ஆவிக்குரிய வரங்களை இலகுவாக எடுத்துக்கொள்ளவும், ​​அவற்றை அலட்சியப்படுத்தவும் கூடாது என பவுல் தீமோத்தேயுவை எச்சரிக்கிறார். மாறாக, “உங்கள் முன்னேற்றம் அனைவருக்கும் தெரியும்படி இவற்றைத் தியானித்தும், இவற்றில் நிலைத்திருக்கவும்” என்று இந்த வசனத்தில், அவர் கூறுகிறார்.

2022-ல் உங்கள் முன்னேற்றத்தை மற்றவர்கள் காண்பார்கள். உங்களுக்கு உதவ நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. உங்கள் அழைப்பிலும், உங்களுக்கு தேவன் அளித்த வரத்திலும் அசதியாயிராமல் முன்னேறி செல்லுங்கள். தேவன் உங்களை அபிஷேகித்து, ஆவியின் வரங்களை உங்களுக்கு கொடுத்திருந்தால் அதை புறக்கணிக்காதீர்கள் 

உங்களிடத்தில் ஏதோ ஒன்று அசாதாரணமாக இருப்பதை கவனித்து ஜனங்கள் வியப்படைவார்கள். அது உங்கள் பணியிடமாகவோ அல்லது உங்கள் உடனடி சமூகமாகவோ கூட இருக்கலாம், உங்களை ஒரு குறிப்பிட்ட வேலைக்கென்று தேவன் அனுப்பினால், அவர் சந்தேகத்திற்கு இடமின்றி உங்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்குவார்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக

Transcribe done by: Priya Joe