கறைதிரையற்ற

தேவனின் அழைப்பு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. எவர்கள் அந்த அழைப்பைக் கேட்டு, அதற்கு மறுஉத்தரவளித்து, அக்குரலுக்கும் அவ்வழிகளுக்கும் கீழ்படிகிறார்களோ, தேவன் அந்தப்படியே அவர்களை மேலும் தன் அழைப்பிற்க்கும், இடைப்படுத்தலுக்கும், அறிவுறுத்தலுக்கும் தேர்ந்தேடுத்து, அவர்கள் தேவப்பிள்ளைகளாக இருக்கும்படி அழைக்கப்படுகிறார்கள்.

இது நாம் அறிந்தது. ஏனென்றால் வேதம் அப்படிதான் கூறுகிறது. சகோதர சகோதரிகளே, உங்களில் யாருக்காவது இன்னும் அது குறித்து உறுதியளிக்க வேண்டுமானாலோ அல்லது இந்த பகுதியில் முன்னேற்றம் இருந்தாலோ, தேவனிடம் கேளுங்கள். அவர் அதை உங்களுக்குத் தருவார். தேவனுக்கு பிரியமான வாழ்க்கையை எப்படி வாழ்வதென்று வேதம் நமக்கு கூறுகிறது. அவருடைய நற்செய்தியை அடித்தளமாகக் கொண்டு கட்டப்பட்ட வாழ்க்கை, இந்த பூமியில் இருந்த அவரது வாழ்க்கை, அவர் தன் குமாரன் இயேசு கிறிஸ்துவின் வடிவத்தில் நடந்தது – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவும் இன்னமும், என்று வேதம் நமக்கு கூறுகிறது. எனினும், மெய்யாகவே, அது நம் வாழ்க்கையை வழி நடத்திச் செல்வதற்கு வழிகாட்டியாக மிகவும் முன்பாகவே இருக்கிறது. அடித்தளம் போடப்படுவதற்கு

முன்பே இருந்தது. அதுவும் நமக்கு தெரியும். ஏனென்றால் வேதம் அப்படிதான் கூறுகிறது. “தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துக் கொண்டார்” (எபேசியர் 1 : 4).

“குற்றமற்ற” – அந்தப் பக்கத்தை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அந்த வசனத்தையும், அந்த வார்த்தையின் முக்கியத்துவத்தையும் இன்னும் ஆழமாக பார்க்கப் போகிறோம். “நாம் அவருக்கு முன்பாக பரிசுத்தமுள்ளவர்களாயும், குற்றமற்றவர்களாயும் இருப்போம்”  என்பதன் மூலம் பவுல் என்ன கூற நினைக்கிறார். இப்பொழுதும், ஏற்கனவே இங்கே பிரசங்கித்த ஒன்றை பற்றித் தான் பேசுகிறேன் என்று அறிவேன். போதகர் பலமுறை நமக்கு நினைவூட்டியபடி, ‘கிறிஸ்துவின் இரண்டாம் வருகை’ மற்றும் நிச்சயமாக, ‘மணமகளை ஆயத்தப்படுத்துதல்’ மற்றும், எபேசியர்1:4 – பெரும்பாலும் இவையனைத்தும் “பரிசுத்தம் மற்றும் குற்றமற்ற” என்ற பிரதானமான காரணத்திற்காக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. “பரிசுத்தம் மற்றும் குற்றமற்ற” என்பதன் மூலம் தேவனுடைய அழைப்பு தேவப்பிள்ளைகளாகிய நமக்கு எதை குறிக்கிறது என்பதை ஆழ்ந்து கவனித்து புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

எனவே, இந்தப் பிரசங்கத்தின் தலைப்பு – கறைதிரையற்ற”.

கிறிஸ்துவுக்குள்ளாக நடத்தப்படும் தேவபிள்ளைகளின் வாழ்க்கை, பாவத்தின் மீது வெற்றிச் சிறந்ததாக இருக்க வேண்டும். இவ்வாழ்க்கை, மனிதனின் மீதான பாவத்தின் பிடியின் வரம்புகளைத் தாண்டி, முற்றிலும் தேவனுக்குகென்று கீழ்ப்படுத்தப்பட்டும், ஒப்பிவிக்கப்பட்டும், பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவினால் இயக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது. இது நாம் அறிந்தது.

ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் கழுவப்பட்ட ஒரு ஆண் அல்லது பெண் – தேவபிள்ளைக்கு, வாழ்கையை கடந்து பாவத்தின் மீது ஜெயம் கொள்வது, எளிதாக சுவாசிப்பது போல வரும் என்பதையும் நாம் அறிவோம். கலாத்தியர் 2:20ல் பவுல் கூறுவது போல, பாவத்திலிருந்து மீண்டு அதை ஜெயிப்பது, தேவனின் நிரந்தர குணாதிசயமாக இருக்கிறது மற்றும் இப்போது என்னிலும் உங்களிலும் இயேசு கிறிஸ்து வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதை பிரதிநிக்கிறோம்.

“கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.” (கலாத்தியர் 2:20). என்ன ஒரு பலத்த அறிக்கை! என்ன ஒரு வல்லமையான சாட்சி!

எனவே, பவுல் கூறுவது போல, மாமிசத்தில் அவர் வாழும் அந்த  வாழ்க்கை என்ன? அவர் அடையாளப்படுத்தி, வித்தியாசமாக விவரிக்கும் ஒரு வாழ்க்கை, (அந்த வார்த்தையை மேலே நாம் பார்க்கிறோம்). ஆம், நீங்களும் நானும் மாம்சத்தில் வாழும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. பின்னர், கிறிஸ்து இயேசுவின் விசுவாசத்தில் நீங்களும் நானும் வாழும் ஒரு வாழ்க்கை இருக்கிறது, அது பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட வாழ்க்கை. அல்லேலூயா! நாம் இப்போது வாழ வேண்டிய வாழ்க்கை, இயேசு கிறிஸ்துவில் மீட்பு நாள் வரையில், நாம் எதிர்பார்க்கும் அந்த நித்திய நம்பிக்கை, கர்த்தருடைய வருகை – மீண்டும் ஒருமுறை, மேலும், பவுல் கூறுவது போல, கிறிஸ்து நம்மில் வாழ்வதால், நாம் ஜெயங்கொள்பவர்களாக இருக்கிறோம் மற்றும் நாம் மாம்சத்தில் வாழும் மற்ற வாழ்க்கை மீது ஜெயங்கொள்பவர்களாக இருக்க முடியும் என்ற உணர்வுடனும் வாழ வேண்டும். இஸ்ரவேலின் பரிசுத்தரும், தேவனுடைய ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரம்!

அப்படியானால் கேள்வி என்னவெனில், நாம் எவ்வாறு ஜெயங்கொள்பவர்களாக மாறுவது? பாவத்தை நாம் எப்படி ஜெயிப்பது?

தேவனின் குரலை கேட்பதும், உங்களுக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியின் உணர்த்துதலை புரிந்துகொள்வதுமே, ஒரு நிச்சயமான வழி. பரிசுத்த ஆவியின் வல்லமையில் தம் குமாரன் மூலம் தேவன் பேசும்போது, ​​அவருக்குக் கீழ்ப்படிந்து இருங்கள். மேலும், கீழ்படிந்திருக்க,  ஒப்புக்கொள்ளக்கூடிய அந்த பகுத்தறிதல் நமக்கு இருக்க வேண்டும். நாம் கேட்பது தேவனின் குரல் என்றும், மெய்யகவே, நமக்கு பரிசுத்த ஆவியானவரே உணர்த்துகிறார் என்பதையும் 

தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், அந்த பகுத்தறிவு இயற்கையாகவே தேவ ஆவியின் அசைவால் வருகிறது. மேலும் தேவப்பிள்ளைகளாகிய நீங்கள் அதை பகுத்தறியக்கூடும், நீங்கள் அந்தக் குரலை கேட்கக்கூடும், அவர் சொல்வதை நீங்கள் பின்பற்றக்கூடும்.

ஏனெனில், யோவான் 10:27  “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.” என்று கூறுகிறது.

சகோதர சகோதரிகளே, உங்களில் யாருக்காவது அதைக் குறித்து மேலும் உறுதிப்பட தேவை இருந்தாலோ அல்லது இந்த பகுதியில் ஒரு திருப்பமோ மாற்றமோ தேவைப்பட்டாலோ, தேவனிடம் கேளுங்கள். அவர் அதை உங்களுக்குத் தருவார். அல்லது இந்த ஆராதனைக்குப் பிறகு போதகரை சந்திக்கவும். அல்லது, சபையின் மூப்பர்களை சந்திக்கவும். மேலும், அவர்கள் உங்கள் மீது கரங்களை வைத்து ஜெபிக்கவும், கிறிஸ்துவில் உங்களை வழி நடத்தவும், நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக்கொள்ளவும் உங்களுக்காக நான் பிராத்திக்கிறேன். ஆமென்! 

“கறைதிரையற்ற” வாழ்வுக்கு மீண்டும் வருவோம்.

மன்னிப்பதாலும், மன்னிக்கப்படுவதாலும் மட்டுமமே பாவத்திலிருந்து விடுதலைக்கு கிடைக்காது. அது ஒரு ஆரம்பம் மட்டும் தான்.

கிறிஸ்து, நியாயப்பிரமாணப் போதகர்களும் பரிசேயர்களும் தம்மிடம்  கொண்டு வந்த பெண்ணிடம், யாராகிலும் அவளைக் குற்றஞ்சாட்டினார்களா என்று கேட்டார்,  அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.(யோவான் 8:10,11). அங்கே மன்னிப்பு இருந்தது. மேலும், ‘இனி பாவம் செய்யாதே!’ – என்ற ஒரு அறிவுறுத்தலும் அல்லது ஒரு கட்டளையும் இருந்தது.

எனவே, கிறிஸ்துவுக்குள்ளான ஒரு புதிய வாழ்க்கையின் ஆரம்பம் அதுவே. பாவ மன்னிப்பு, அதுவரை ஒருவன் செய்த பாவங்களை அனைத்தையும் அழித்துவிடும். இந்த ஆளுகையின் வல்லமையால், இனி வருங்காலத்திலும் பாவத்தின் ஆளுகை இனி இல்லை. “இனி பாவம் செய்யாதே!” என்ற அந்த ஒரு ஆளும் குரலின் வல்லமையே ஒருவரை கறைதிரையற்ற வாழ்க்கையை வாழச்செய்கிறது. இது தேவனின் ஒரு நித்திய குரல், இதுவே வரலாற்றில் இன்னும் எதிரொலிக்கிறது; ஒவ்வொரு தேவப்பிள்ளைகளின் காதுகளிலும் எதிரொலிக்கிறது; கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் வல்லமையில், மணவாளன் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை, குற்றமற்ற உணர்வோடு வாழ்க்கையை வாழ  அவர்களை ஊக்குவிக்கிறது. அல்லேலூயா!

கலாத்தியர் 2:20 பவுல் கூறுகிறதாவது – இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புக்கூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.” 

எனவே, விசுவாசத்தோடு வாழ்வதுதான் அது. மேலும், அந்த விசுவாசம் என்ன? அந்த விசுவாசம் தான், பாவம் செய்ய கூடாதென்று சொல்ல கற்றுக்கொடுக்கிறது. “நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணும்மபடி நமக்குப் போதிக்கிறது.” – ( தீத்து 2:12)

எனவே, அந்த வாழ்க்கையை நாம் வாழ முடியும். பரிசுத்த ஆவியானவர் அவ்வாறு வாழ நமக்கு உதவிச் செய்கிறார். இந்த நீதி நிறைந்த, ஆவி நிறைந்த வாழ்க்கை, தம்மால் அழைக்கப்பட்டவர்களுக்கும், தன்னுடைய சீஷர்கள் அனைவருக்கும் உண்டு என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். எனவே, அவருடைய அழைப்புக்குக் கீழ்ப்படிவதே முக்கியமானது. கறைதிரையற்ற வாழ்க்கை வாழ்வதற்கான இன்னொரு முக்கிய வழி இதுவே. 

முதலாவது, அவருடைய அழைப்பைக் கேட்கவேண்டும். இரண்டாவது, அவருடைய அழைப்பிற்குக் கீழ்ப்படியவேண்டும்.நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.” (மத்தேயு 5:6)

கறைதிரையற்ற வாழ்க்கை என்பது இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஏற்ற வாழ்க்கையே. ஏற்றது என்றாலும், இன்னும் ஒத்துப்போகவில்லை. வேதத்தில் 2 கொரிந்தியர் 3:18 வாசிக்கும் போது “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.” என்பதை அறிவோம். தேவப்பிள்ளைகளாகிய நாம் அதை பகுத்தறிந்து, அந்த குரலைக் கேட்டு, அதை பின்பற்ற முடியும்.  ஏனெனில், யோவான் 10:27ல் எழுதி இருக்கிறப்படி “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.” 

அதை எப்போது “பார்க்க” போகிறோம்? அவர் வருகையில் பார்ப்போம்!

அப்போதுதான், அவருடைய குமாரனின் மகிமை தோன்றுவதுபோலவே, ​​அவருடைய சாயலாக நாம் முழுமையாக மறுரூபமாகிறோம். அதுவரையில், நம்மில் மாற்றம் நடந்து கொண்டு தான் இருக்கும். மேலும், நாம் அவருடன் வாழும்போது, ​​தேவனுடைய ஆலயத்தின் தூண்களாக இருக்கும் ஊழியக்காரர் ஆகிறோம் என்று வேதம் கூறுகிறது.

“ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதியநாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.” (வெளிப்படுத்துதல் 3:12). இதுவே ஆசியாவில் இருக்கிற ஏழு சபைகளுக்கு எழுதும்படி தேவன் கூறியது.

மேலும், இதை வாசிக்கிற நமக்கும் கூறியது!

தேவனுடைய வாக்குத்தத்தம் என்னவெனில், தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலமும், பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும், பாவத்தை  ஜெயித்து, மேலும் “இனி பாவம் இல்லை” என்றும் ஒரு வாழ்க்கை வாழக் கூடும் என்பதே.

திருச்சபையே, கேளுங்கள்! இதுதான் அந்த நேரம். அவரை கண்டடையுங்கள். அவரை அனைத்துத் தழுவுங்கள். அவர் காணப்படும் வேளையில் அவரை கண்டடையுங்கள். அப்போஸ்தலர் 5:32 எழுதி இருக்கிறப்படி, “தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியின்” மூலம், வல்லமை மிகுந்த வெற்றிச் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கான வழியை கண்டடையலாம்.

ஏனெனில், அவரில் ஜீவன் இருக்கிறது. அவரிடமிருந்தே ஜீவன் வருகிறது. அவர் மூலமாகவே, ஜீவன் வருகிறது. மேலும், அவருக்காகவே ஜீவன் இருக்கிறது.

சர்வ வல்லமையுள்ள தேவன் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாகவும் பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும் அந்த கறைதிரையற்ற வாழ்க்கையை வாழ்வதற்கு உங்களுக்கு உதவிச் செய்வாராக. 

ஆமென்.

Transcribe done be: Priya Joe