உங்கள் ஊழியத்தை வாழுங்கள்

இந்த வாக்கியத்தை முடிக்குமாறு நான் உங்களிடம் கேட்டால், “என் வாழ்க்கை வாழத் தகுதியற்றது, எனக்கு_________ இல்லையென்றால்”, அதற்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்? வேறு வார்த்தைகளில் கூறினால், உங்களுடைய வாழ்க்கையின் உயர்ந்த நோக்கம் என்ன? வாழ்க்கையில் நீங்கள் எவற்றை செய்யத் தயாராக இருக்கிறீர்கள், செலவு எதுவாக இருந்தாலும்? பெரும்பாலான மக்களுக்கு, அது சுய லாபம் மற்றும் மகிழ்ச்சி ஆகும். எல்லோரும் எப்படியாவது ,ஏதாவது ஒரு வேலையைப் பெற வேண்டும், வெளிநாட்டில் குடியேற வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஒரு வசதியான வாழ்க்கையை உருவாக்கி , வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பது அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள ஒன்றாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான கிறிஸ்தவர்களும் இப்படித்தான் சீஷத்துவம் இல்லாமல் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் போல உலக ஆசீர்வாதங்கள் மற்றும் உடல் வசதிகளுக்காக தேவனுடைய ராஜ்யத்தில் தங்கள் அழைப்பைப் புறக்கணித்து, நிராகரித்து வாழ்கிறார்கள்.

அப்போஸ்தலர் 20:24 க்கு நாம் திரும்பும்போது, அப்போஸ்தலன் பவுல் அதே கேள்விக்கு எவ்வாறு பதிலளித்தார் என்பதை வாசிக்கிறோம்.பவுல் தனது வாழ்க்கையை ஒரு சுய நோக்க இதயத்துடன் மட்டுமே நிறைவேற்றினால் தனது வாழ்க்கையை தகுதியானதாக எண்ணுவதில்லை என்று கூறுகிறார் வாழ்வின் ஊழியம்- கிறிஸ்துவில் உள்ள கிருபையின் நற்செய்தியை தெரியப்படுத்துவது. பவுலுக்கு சுகபோக வாழ்க்கை உயர்ந்த முன்னுரிமையாக இருந்ததில்லை. மேலும், முந்தைய வசனத்தைக் கவனியுங்கள் அவர் எந்த சூழலில் நாம் எதிர்பார்க்கும் அறிக்கையை கூறுகிறார் என்று. ஒவ்வொரு நகரத்தில் சிறைவாசமும் துன்பங்களும் தனக்கு காத்திருக்கின்றன என்பதை பவுல் அறிவார். ஆனால் அதன் மூலம் அவர் தனது வாழ்க்கையின் இறுதி நோக்கம் அனைத்தையும் நிறைவேற்றினால், அதுவே மதிப்புக்குரியது என்று கூறுகிறார். வாழ்ந்து அதனால் துன்பத்தில் இருந்து காக்கப்பட வேண்டும் என்று தன் உயிரை தனக்கு பிரியமானதாக கருதுவதில்லை என்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பவுல் தனது வாழ்க்கையில் அழைப்பின் ஆழமான உணர்வை அறிந்திருந்தார். அவர் தனது ராஜ்ய நியமிப்பிற்காக வாழ்ந்தார். அவரது வாழ்க்கையைப் பற்றிய ஒரே முன்னுரிமை அந்த ராஜ்யதிற்கான காரியங்களை நிறைவேற்றுவதாகும். அதற்கு அவர் எந்த செலவையும் கொடுக்க தயாராக இருந்தார். அவர் எந்த விலையிலும் தனது பணியை நிறைவேற்றினார்.

நீங்களும் நானும் எப்படி இருக்கிறோம்? நம் அழைப்பின் ஆழமான உணர்வு நமக்கும் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? நம் வாழ்க்கையில், நம்முடைய ராஜ்யதின் பொறுப்பை நாம் அறிந்திருக்கிறோமா?, அதை நாம் வாழ்கிறோமா? ராஜ்ஜியத்தில் உள்ள அனைவரும் ஒரு உடலின் அனைத்து உறுப்புகளைப் போலவே, ஒரு தனித்துவமான அழைப்பு மற்றும் ஒரு ஊழியத்தை பற்றியது, கிறிஸ்துவின் நற்செய்தியின் மூலம் தம்மை மகிமைப்படுத்துவதே தேவனின் ஒட்டுமொத்த ஊழியம். அந்த பெரிய கட்டளையில் உங்கள் பங்கு என்ன என்று தெரியுமா? உங்கள் ஊழியத்தை வாழ்வதற்கான நான்கு நடைமுறை அம்சங்களைப் பார்ப்போம்.

1.ஊழிய வாழ்க்கை

மத்தேயு 5:13-14 ல், நீங்கள் பூமிக்கு உப்பு மற்றும் ஒளி என்று இயேசு கூறியபோது உலகம் முழுவதும் முழுநேர ஊழியர்களை மட்டுமல்ல, முழு சபையையும் அவர் மனதில் வைத்திருந்தார். ஏனெனில் கிறிஸ்துவில், நாம் அனைவரும் தேவனின் ஒளியாகிவிட்டோம்(எபே. 5:8; பிலி. 2:15). நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும், உலகின் ஒளியாக செயல்படுவதற்கு. இது நமது பரலோக ராஜ்ய நியமிப்பு. ஆனால் நம் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையான செல்வாக்கு சூழல்கள் இருக்கிறது – உங்கள் குடும்பம், உங்கள் பணியிடம், உங்கள் பள்ளி போன்றவை – நீங்கள் இருக்கும் இடம் ,அந்த உலகத்தின் ஒளி. இது உங்கள் தனித்துவமான ராஜ்யத்தின் இடமாகும்.

உங்கள் ராஜ்யத்தின் ஊழியம் மற்றும் வேலை அமைப்பு ஆகியவற்றின் மூலம் உங்கள் வாழ்க்கையைப் பார்க்கிறீர்களா? உங்கள் குடும்பம், பள்ளி மற்றும் அலுவலகம் ஆகியவற்றில், அந்த உலகின் ஒளியாக உங்கள் பங்கை நீங்கள் உணர்கிறீர்களா? உங்கள் பணியை மனதில் கொண்டு பள்ளி அல்லது அலுவலகம் சொல்லுகிறீர்களா? பவுல் சொல்லியது போல என் குடும்பத்தில் ,அலுவலகத்தில், பள்ளியில் எனது தனிப்பட்ட நோக்கங்கள் என் இறுதி நோக்கம் அல்ல, ஆனால் என்னைப் பற்றிய தேவ ராஜ்யத்தின் காரியங்களை நிறைவேற்றுவது தான் என் நோக்கம் என்று சொல்ல முடியுமா? இயேசு கிறிஸ்துவின் உண்மையான சாட்சியாக குணத்திலும் நடத்தையிலும் வாழ்வதன்மூலம் உங்களை அறிந்தவர்கள் அனைவரும் தேவனின் கிருபையின் வல்லமையை அறிய வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

2. ஊழிய ஜெபம்

நெகேமியா ஒரு போதகரோ ,தீர்க்கதரிசியோ அல்ல, ஆனால் மதச்சார்பற்ற துறையில் இருந்தார். ஆயினும், நெகேமியா 1:1-4ல் அவர் தேவனின் ஜனங்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார் என்று வாசிக்கிறோம். கானானியர்களும் எருசலேமிலிருந்து ஆட்களும் வந்தபோது, அவர் நாடுகடத்தப்பட்டு எருசலேமுக்கு திரும்பிய எஞ்சியவர்களின் நிலையை அறிய ஆவலாக இருந்தார். எருசலேமின் சுவர்கள் உடைக்கப்பட்டு எரிக்கப்பட்டதால் பெரும் பிரச்சனையிலும் அவமானத்திலும் இருந்தோம் என்று அவர் வாசித்தார். அவைகளைக் கேட்டதும் மிகவும் துக்கத்துடனும் ஜெபத்தில் உபவாசத்துடனும் பல நாட்கள் உட்கார்ந்து அழுதார். இங்கே ஒரு நல்ல ஊழிய ஜெபத்தின் உதாரணத்தை காணலாம், இங்கே ஒரு மனிதன் மக்களுக்காக வேதனை மற்றும் பாரத்தால் நிரப்பப்படுகிறார். அவர் மிகவும் உபவாசம் மற்றும் பிரார்த்தனை மூலம் அவர்களுக்காக பரிந்து பேசுகிறார்.

நம் நாட்டின் பிற பகுதிகளில் தேவ ஊழியம் செய்யும் ஊழியர்கள் உபத்திரவம் மற்றும் துன்பங்கள் அடைவதை பற்றிய செய்திகளையும் நாம் அடிக்கடி கேட்கிறோம். அவர்களின் துன்பம் நெகேமியாவை வேதனைப்படுத்தி தூண்டியது போல் நம்மைத் தூண்டுகிறதா? ஒருவர் மதச்சார்பற்ற துறையில் இருந்தும் நெகேமியா போல பரிந்துரை ஊழியம் செய்யலாம். உங்கள் ஜெப வாழ்க்கையில், நீங்கள் பரிந்துரையை பயிற்சி செய்கிறீர்களா? அப்படியானால், சபையின் ஆன்மீக நல்வாழ்வுக்காக குறிப்பாக ஊழிய பணித்தளங்களுக்காக நீங்கள் எவ்வளவு அதிகம் பரிந்து பேசுகிறீர்கள்? இந்தியாவின் ஊழிய பணித்தளங்களில் இருபவர்களுக்காக ஜெபிக்க தவறாமல் சிறிது நேரம் ஒதுக்குகிறீர்களா?

கர்த்தருடைய ஜெபம் நமக்குக் கற்பிக்கிறது ஜெபத்தில் நாம் கேட்கும் அனைத்திலும் உயர்ந்த முன்னுரிமை தேவனை மகிமைப்படுத்துதல், பூமியில் அவருடைய ராஜ்யத்தை விரிவுபடுத்துதல் மற்றும் அவரது ஜனங்கள் அவரது விருப்பத்திற்கு கீழ்ப்படிதல் முதலானவைகளாகும். உங்கள் ஜெப வாழ்க்கையில், உங்கள் எல்லா ஜெபங்களும் தேவனின் ஊழியத்தை மையமாகக் கொண்டது என்று சொல்ல முடியுமா? ராஜ்யத்தின் காரியத்திற்காக பரிந்து பேசுவதற்கு நாம் நம் ஜெப வாழ்க்கையில் முன்னுரிமை அளித்து மற்ற எல்லா தனிப்பட்ட விஷயங்களையும் இரண்டாம் பட்சமாக வைக்கும்போது தான், நாம் ஊழிய ஜெபத்தில் முழுமையாக ஈடுபடுகிறோம்.

3.ஊழியத்திற்கு கொடுத்தல்

அப்போஸ்தலர் நடப்படிகளில், சபை தனது ஊழியத்தை நிறைவேற்றுவதைப் பற்றி நாம் பார்க்கிறோம், மேலும் மக்கள் தங்கள் உடைமைகளால் இழுத்து கொள்ளப்படவில்லை (அப்போஸ்தலர் 2:44-45;4:32, 34-35). அவர்களில் யாரும் குறையுள்ளவர்களாக இருக்கவில்லை, ஏனென்றால் ஆரம்பகால திருச்சபை யாரையும் குறைவுள்ளவர்களாக இருக்க அனுமதிக்காது. சபையில் யாது ஒருவருடைய தேவையையும் அந்த நாட்களில் அனைவரின் பணத்தால் பூர்த்தி செய்தனர். அவர்கள் பணத்தை விட தேவனுடைய ராஜ்யத்தை மதித்ததால் தான் அதை செய்ய முடிந்தது. பவுலை போன்று, அவர்களை குறித்த ராஜ்யத்தின் காரியங்களை நிறைவேற்றுவதில் உள்ள தனிப்பட்ட செலவைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ராஜ்யத்தில் நம் ஊழிய அழைப்பை பணத்தை விட விலையேறப்பெற்றதாக எண்ணும்போது, நாமும் மகிழ்ச்சியுடன் கொடுக்க ஆரம்பிப்போம். மேலும் பணம் மட்டுமல்ல, நாம் அப்போஸ்தலரில் படிக்கிறோம் யாரோ ஒருவர் இரட்சிக்கப்படும்போது , அவர்கள் அதை சேவை மற்றும் விருந்தோம்பல் தோரணையுடன் நிரூபித்தார்கள் (அப் 16:15) என்று.

உங்கள் பணம், வீடு, கார் மற்றும் உங்கள் உடைமைகள் அனைத்தையும் எப்படிப் பார்க்கிறீர்கள்? நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அனுபவிக்கும் ஆசீர்வாதமாக அல்லது ராஜ்யத்திற்கான காரியங்களின் முன்னேற்றத்திற்காக பொறுப்பாளராக நீங்கள் அவைகளை பார்க்கிறீர்களா? உங்களால் முடிந்தவரை பணத்தைச் சேமித்து, உங்களுக்குத் தேவையான அளவு மட்டும் செலவழிக்கவும். அப்படிச் செய்வது முற்றிலும் சரி, இருப்பினும், நித்திய மகிமைக்காகக் காத்திருக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம், நமக்கு ஆடம்பரம் தேவையில்லை. எல்லாச் செழுமையையும் ஆடம்பரத்தையும் தவிர்த்து, அந்த கூடுதல் பணத்தை நாம் ராஜ்யத்திற்கான நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம். உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருந்தால், மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக ஏன் திறக்கக்கூடாது? – யாரோ சபையில் தேவைப்படுகிறவர்களுக்கு, அல்லது மிஷனரிகள் தங்கள் விடுமுறையின் போது ஓய்வெடுக்க கொடுக்கலாமே? நம்மிடம் ஒரே ஒரு வீடு இருந்தாலும், அதுபோன்ற ராஜ்ய நோக்கங்களுக்காக ஒரு அறையை ஏன் ஒதுக்கக்கூடாது? இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள். உண்மையான ஆசீர்வாதம் கொடுப்பதில் உள்ளது, பெறுவதில்லை(அப் 20:35).

கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனின் இந்த ஜெபத்தை நாமும் நம்முடைய ஜெபமாகவும் மாற்றி கொள்ளலாமா? – “ஆண்டவரே, எனக்கு சொந்தமான எல்லாம், நீங்கள் மட்டுமே அதை எனக்குக் கொடுத்தீர்கள். எனவே, நீர் எப்போது வேண்டுமானாலும் எனக்கு சொந்தமாக எதையும் என்னிடம் கொடுக்க அல்லது பகிர்ந்து கொள்ளும்படி கேட்கலாம். உம்முடைய மகிமை மற்றும் உம்முடைய ராஜ்யத்தின் விரிவாக்கத்திற்காக நீர் விரும்பும் எவருக்கும் என்னுடையவைகளை கொடுப்பேன்.” இதுவே ஊழியத்திற்கு கொடுக்கும் இதயம் ஆகும்.

4. ஊழியத்திற்கு செல்லுதல்

மத்தேயு 28:19-20ல், கர்த்தராகிய இயேசுவின் ஒரு பெரிய கட்டளை நமக்கு இருக்கிறது, அதுவும் “செல்லுதல்” என்று தொடங்குகிறது. போகாமல் நம் ஊழியத்தை நிறைவேற்ற முடியாது. நாம் நமது சொகுசு வாழ்க்கையிலிருந்து வெளியே வந்து சேவை வாழ்க்கை வாழ வேண்டும் அதனால் இயேசுவின் சீடர்கள் உருவாக்கப்பட்டு தேவனுடைய ராஜ்யம் விரிவடையும்.

“செல்வதை” மூன்று வழிகளில் புரிந்துகொள்வோம். முதலாவதாக, நாம் நமது ராஜ்யத்தின் நியமிப்பை நிறைவேற்றும்படி அனைவரும் தினசரி அடிப்படையில் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது, ​​குடும்பமாக இருந்தாலும் சரி, பள்ளி, அல்லது அலுவலகத்தில் நெகேமியா, தானியேல், யோசேப்பு போன்றவர்கள் அனைவரும் மதச்சார்பற்ற பதவிகளை வகித்திருந்தும் ராஜ்யத்தின் காரியங்களுக்காக வாழ்ந்ததுபோல, நாம் நம்மை சுற்றிலும் உள்ள சூழல்களில் தேவனின் ராஜ்யத்தில் நாம் அழைக்கப்பட்டதை பற்றிய ஆழமான உணர்வுடன் செல்ல வேண்டும். இரண்டாவதாக, நெகேமியா உபவாசித்து தேவனின் ஜனங்களுக்காக பெரும் பாரத்துடன் பிரார்த்தனை செய்த போது, தேவன் நெகேமியாவை தனது வேலையிலிருந்து சிறிது காலத்திற்கு விலகி எருசலேம் சென்று அதன் சுவர்களை மீண்டும் கட்ட வேண்டும் என்ற பாரத்தை அவரது இதயத்தில் வைத்தார் என்று பார்க்கிறோம். இதேபோல், ஒரு குறிப்பிட்ட பணிக்காக, நமது வேலையில் இருந்து சிறிது இடைவெளி எடுத்து, ஊழிய களத்தை பார்வையிட தேவனால் வழிநடத்தப்படலாம். ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் எங்காவது சென்று அங்குள்ள சபைகளை சீர்படுத்தலாம். மிஷனரிகளை சந்திப்பதும் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதும் உங்களுக்கும் அவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருக்கும். நீங்கள் அவர்களை சந்திக்கும் போதும், ஊழியகாரர்கள் தேவனுக்காக தீவிர கீழ்ப்படிதலுடன் வாழ்கிறதை பார்க்கும்போதும் உங்கள் விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் சவால் செய்யப்படும். மேலும் நீங்கள் அவர்களை விசாரிக்கும்போது, ​​ஜெபிக்கும்போது, ​​அவர்களுடன் ஊழியம் செய்யும்போது மிஷனரிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். பவுலைப் போன்ற வல்லமைவாய்ந்த ஒருவர் கூட, தனது சோதனைகளில் விசுவாசிகளைக் கண்டபோது ஊக்கமடைந்தார் என்று நாம் வாசிக்கிறோம் (அப்போஸ்தலர் 28:15; 2 தீமோ.1:16-17) அதைப்போல நமது மிஷனரி சகோதரர்களை நாம் பார்க்கும்போது அவர்கள் ஊக்கமடைவார்கள். மூன்றாவதாக, நம்மில் சிலர் அறுவடையின் தேவனால் சில பணி வயல்களுக்கு முழுமையாக செல்லவும் அங்கு வேலை செய்யவும் அழைக்கப்படுகிறார்கள்.

இவற்றில் எந்த “செல்லுதலை” தெரிந்தெடுக்க கர்த்தர் இன்று உங்களை அழைக்கிறார்? தேவனுடைய ராஜ்யத்திற்காக நாம் அனைவரும் எங்காவது செல்ல வேண்டும். நீங்கள் இன்று தீர்மானிக்க வேண்டியிருக்கலாம், பள்ளி அல்லது அலுவலகத்திற்குச் கிறிஸ்துவின் சாட்சியாக இருக்க வேண்டும் என்ற உள்நோக்க ஆசையுடன் செல்ல தொடங்க வேண்டும். உங்கள் வருடத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி மிஷன் பணித்தளங்களை பார்வையிடுவதற்காக நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அல்லது குறைந்தபட்சம் ஒவ்வொரு வாரமும் சில மணிநேரங்கள் பணித்தளங்களில் உள்ள ஒருவரை அழைத்து அவர்களை ஊக்குவிக்கவும். ஒருவேளை உங்கள் சொகுசு சூழலை விட்டு வெளியேறி, முழு நேரமாக ஒரு பணித்தளத்திற்கு நற்செய்தி பணியாளராக செல்வதற்கான அழைப்பை நீங்கள் உணர்கிறீர்கள்? “இதோ, ஆண்டவரே, உமது சாட்சியாக என்னை அனுப்பும் ” என்று உங்கள் இதயம் அழுகிறதா?. ஊழிய பயணத்தில் நீங்கள் எவ்வாறு பங்கேற்க வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு வழிகாட்டுவர்.

முடிவுரை

நமது ஊழிய பணியை செய்து, நமது தேவனின் ராஜ்யத்தின் அழைப்பை நிறைவேற்றினால் மட்டுமே வாழ்க்கை வாழத் தகுதியுடையது என்று பார்த்தோம். நடைமுறையில், நாம் ஊழியத்தை வாழ்வது என்பது ஊழியத்திற்காக ஜெபிப்பது,கொடுப்பது, மற்றும் செல்லுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இருப்பினும்,இவைகள் பரிசுத்த ஆவியின் உதவியின்றி நாம் இவைகள் எதையும் செய்ய துணியக்கூடாது. அப்போஸ்தலர் 1:8ல் இயேசு தம் சீடர்களிடம் கூறியது போல், பூமியின் கடைசிவரைக்கும் நாம் அவருடைய சாட்சிகளாக இருக்க வேண்டுமென்றால் பரிசுத்த ஆவியின் வல்லமையை நாம் பெற வேண்டும், ஆகவே, நம்மைப் பலமாக நிரப்பவும், அவருடைய ராஜ்யத்திற்காக வாழ நமக்கு அதிகாரம் அளிக்கவும் பரிசுத்த ஆவியானவரை நாடுவோம். நாம் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுவோம், நமது அழைப்பிற்கு மதிப்பளித்து, நமது ராஜாவாகிய கர்த்தராகிய இயேசுவின் நித்திய மாட்சிமைக்காக நமது ஊழியத்தை வாழ்வோம். ஆமென்.

மொழி பெயர்த்தவர்

பொன்சிபா.வி